இது வெறும் ஆரம்பம் மட்டுமே...நேற்றைய அதிரடிக்குப் பிறகு ஜெய்ஸ்வால் பேட்டி!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யசஷ்வி ஜெய்ஸ்வால், இது வெறும் ஆரம்பம் மட்டுமே  என தெரிவித்தார்.
இது வெறும் ஆரம்பம் மட்டுமே...நேற்றைய அதிரடிக்குப் பிறகு ஜெய்ஸ்வால் பேட்டி!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யசஷ்வி ஜெய்ஸ்வால், இது வெறும் ஆரம்பம் மட்டுமே நாளைய போட்டிக்கு நான் தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார்.

 இந்த ஆண்டு ஐபில் தொடர் யசஷ்வி ஜெய்ஸ்வாலுக்கு சிறப்பானதாக அமைந்தது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியது அவருக்கு இந்திய அணியில் இடம் பிடிக்க உதவியது. இந்திய அணிக்காக களமிறங்கிய அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அசத்தினார். அதற்கு அடுத்த போட்டியிலும் அரைசதம் அடித்தார். தற்போது இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடிய 3-வது போட்டியில் டி20 போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கினார் ஜெய்ஸ்வால். அவருக்கு டி20 அறிமுகப் போட்டி சிறப்பானதாக அமையவில்லை. ஆனால், அவர் விளையாடிய அடுத்த போட்டியில் (4வது டி20) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நேற்றையப் போட்டியில்  51 பந்துகளில் 84 ரன்கள் அசத்தினார். 

இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4-வது டி20 போட்டி வெறும் ஆரம்பம் மட்டுமே நாளைய போட்டிக்கு நான் தயாராக இருக்கிறேன் என ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று போட்டி முடிவடைந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது: இது வெறும் ஆரம்பம் மட்டுமே. நான் எனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்த விரும்புகிறேன். இன்றைய (ஆகஸ்ட் 12) போட்டியில் சிறப்பாக செயல்பட்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், நாளைய (ஆகஸ்ட் 13) போட்டிக்கு தயாராக இருப்பதை நான் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றையப் போட்டியில் அரைசதம் அடித்தது மகிழ்ச்சி. இந்திய அணிக்காக விளையாடுவது எப்போதுமே பெருமையான தருணம். அணியில் இடம் பிடித்ததற்கு பின்னணியில் கடின உழைப்பு கண்டிப்பாக உள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com