டி20 தொடர் தோல்விக்கு இதுதான் காரணம்: ராகுல் டிராவிட்!

இந்திய அணியில் பின் வரிசையில் கடைசியில் நின்று ஆடுவதற்கான வீரர்களை சேர்க்க வேண்டுமென இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
டி20 தொடர் தோல்விக்கு இதுதான் காரணம்: ராகுல் டிராவிட்!

இந்திய அணியில் பின் வரிசையில் கடைசியில் நின்று ஆடுவதற்கான வீரர்களை சேர்க்க வேண்டுமென இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை 2-3 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகளிடம் இந்தியா இழந்தைதயடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 தொடரையும் 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவைத் தவிர மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் இந்திய அணியால் அதிக அளவில் ரன்கள் குவிக்க முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 165 ரன்கள் மட்டுமே குவித்தது. தொடரைக் கைப்பற்றுவதற்கான முக்கிய போட்டியில் இந்திய அணி அதிக ரன்கள் சேகரிக்க முடியாததால் தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில், இந்திய அணியில் பின் வரிசையில் கடைசியில் நின்று ஆடுவதற்கான வீரர்களை சேர்க்க வேண்டுமென இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது: இந்திய அணியில் மாற்றம் செய்வதற்கான தேவை ஏற்படவில்லை என்பதாக நான் நினைக்கிறேன். ஆனால், அடுத்தடுத்து வரும் போட்டிகளில் சில இடங்களில் இந்திய அணி இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் நிலைத்து ஆடி அணியின் ஸ்கோரினை உயர்த்தும் வீரர்களை அடையாளம் காண வேண்டும். இந்திய அணிக்கு அந்த விஷயம்  சவாலானதாக இருக்கிறது. நாங்கள் எங்களது சிறப்பான பங்களிப்பை வழங்க விரும்புகிறோம். அணியில் பந்துவீச்சாளர்களை குறைத்தும் விளையாட முடியாது. இறுதிக் கட்டங்களில் சிறப்பாக விளையாடி ரன் குவிக்கும் வீரர்களை அடையாளம் காண்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com