படம்: டிவிட்டர் | ஐசிசி
படம்: டிவிட்டர் | ஐசிசி

தாஜ் மஹாலில் உலகக் கோப்பை!

இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கான கோப்பையை தாஜ் மஹாலில் மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
Published on

இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கான கோப்பையை தாஜ் மஹாலில் மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. அக்டோபர் 8-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் இந்திய விளையாடவுள்ளது.

இதுவரை பிற நாடுகளுடன் இணைந்து உலகக் கோப்பை போட்டியை நடத்திவந்த இந்தியா, முதல்முறையாக தனியாக நடத்துகின்றது.

இந்த உலகக் கோப்பை போட்டியை பிரபலப்படுத்துவதற்காக பிசிசிஐ, ஐசிசி இணைந்து புதிய முயற்சியாக, உலகக் கோப்பையை பிரத்யேக பலூனில் வைத்து வானத்துக்கு அனுப்பி, பூமியில் இருந்து 1.20 அடி உயரத்தில் பறக்கவிட்டது.

படம்: ஐசிசி
படம்: ஐசிசி

தொடர்ந்து, 100 நாள்கள் 18 நாடுகளில் உள்ள 40 நகரங்களுக்கு உலகக் கோப்பை எடுத்துச் செல்லும் பணி நடைபெற்ற நிலையில், தற்போது கோப்பை இந்தியா வந்தடைந்தது.

ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் வளாகத்தில் மக்களின் பார்வைக்காக தற்போது உலகக்கோப்பை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவுள்ள உலகக் கோப்பை, இறுதியாக நரேந்திர மோடி மைதானத்துக்கு வந்துசேரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com