ஒரே ஓவரில் 101, 107, 102, 95 மீட்டர்களுக்கு சிக்ஸர் அடித்த பொல்லார்ட் ! (விடியோ) 

சிபிஎல் கிரிக்கெட் போட்டியில் கைரன் பொல்லார்ட் ஒரே ஓவரில் அடித்த 4 சிக்ஸர்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது. 
படம்: ட்விட்டர் | சிபிஎல் டி20
படம்: ட்விட்டர் | சிபிஎல் டி20

கரீபியன் ப்ரீமியர் லீக்கின் 12வது போட்டியில் டிகேஆர்(டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்) அணிக்கு எஸ்கேஎன்பி (செயிண்ட் கிட்ஸ் அண்ட் பாட்ரியாட்ஸ்) அணி 20 ஓவர்களுக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்து. இதில் அதிகபட்சமாக ரூதர்போர்ட் 62 ரன்கள் எடுத்தார். 

அடுத்து ஆடிய டிகேஆர் அணி 17.1 ஓவர்களுக்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் நிகோலஸ் பூரன் அதிகபட்சமாக 961 ரன்களும் டுக்கர் 36 ரன்களும் பொலார்ட் 37 ரன்களும் ரஸ்ல் 8 பந்துகளில் 23 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். 

எஸ்கேஎன்பி அணியின் நவீத் வீசிய 15வது ஒவரில் கேப்டன் பொல்லார்ட் 4 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். இதில் முதல் சிக்ஸர் ஓவரின் 2வது பந்திற்கு வந்தது. அடுத்து 4,5,6வது பந்துகளுக்கு தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள் அடித்தார்  பொல்லார்ட். இதில் முதல் 3 சிக்ஸர்களும் (101,107,102) 100 மீட்டர்களுக்கு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசி சிக்ஸர் மட்டும் 95 மீட்டரில் விழுந்தது. 

 
இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தற்போது பயிற்சியாளராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com