ஆசியக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆசியக் கோப்பை தொடரின் இன்றையப் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையும் படிக்க: அணியின் தேவைக்கேற்ப பந்துவீச தயாராக இருக்கிறேன்: முகமது ஷமி!
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது நயீம் மற்றும் தன்சித் ஹாசன் களமிறங்கினர். தன்சித் ஹாசன் 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின், நஜ்முல் ஹொசைன் களமிறங்கினார். முகமது நயீம் 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. களமிறங்கியது முதலே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய நஜ்முல் ஹொசைன் அணிக்காக ஓரளவு ரன்களை சேர்த்தார். அவர் 122 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும்.
42.4 ஓவர்களில் வங்கதேசம் 164 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 127 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த வங்கதேச அணி 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 37 ரன்களுக்கு வங்கதேசம் 6 விக்கெட்டுகளை இழந்தது.
இலங்கை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பதிரானா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மஹீஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளையும், தனஞ்ஜெயா டி சில்வா, துனித் வெல்லாலகே மற்றும் தாசுன் ஷானகா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: நவம்பரில் தொடங்கும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்!
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேரூர்கடா அரசு மனநல காப்பகத்தில் கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு!
லவ் ஜிகாத்! காதல் திருமணம் செய்த நடிகர் ஆமிர் கானுக்கு மிரட்டல்! லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பா?

மேக்கேதாட்டு அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!
மிதுனம் - இன்றைய ராசி பலன் (19.07.2026)
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



