சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி புதிய சாதனை!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி புதிய சாதனையை படைத்துள்ளது.
சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி புதிய சாதனை!

வெள்ளிக்கிழமை நடைபெற்ற டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணியாக இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று (டிச.1) நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி இந்த சாதனையை நிகழ்த்தியது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரின் நான்காவது ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி. இது சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி பெறும் 136வது வெற்றியாகும்.

2006 முதல் தற்போது வரை 213 டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 136 போட்டிகளில் வெற்றி அடைந்துள்ளது. 

இந்த வெற்றியின் மூலம் 226 ஆட்டங்களில் 135 வெற்றிகளைப் பெற்றுள்ள பாகிஸ்தானை தாண்டி இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி 200 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 102 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா 181 போட்டிகளில் விளையாடி 95 வெற்றிகளும் மற்றும் தென் ஆப்பிரிக்கா 171 போட்டிகளில் விளையாடி 95 வெற்றிகளும் பெற்று அடுத்தடுத்த நிலையில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com