20 ரன்கள் மட்டுமே தேவை; சர்வதேச டி20 போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை முறியடிப்பாரா சூர்யகுமார் யாதவ்?

சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களைக் கடந்த விராட் கோலியின் சாதனையை முறியடிக்க இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
20 ரன்கள் மட்டுமே தேவை; சர்வதேச டி20 போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை முறியடிப்பாரா சூர்யகுமார் யாதவ்?

சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களைக் கடந்த விராட் கோலியின் சாதனையை முறியடிக்க இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் 56 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களைக் கடந்து அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். இந்த நிலையில், விராட் கோலியின் இந்த சாதனையை முறியடிக்க சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 

சர்வதேச டி20 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்கள் எடுக்க இந்திய வீரர் சூர்யகுமார் யாதவுக்கு இன்னும் 20 ரன்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றையப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 20 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் விராட் கோலியின் சாதனையை முறியடித்து இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் (54 இன்னிங்ஸ்களில்) என்ற சாதனையை படைப்பார். 

சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார். அவர் 52 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களைக் கடந்தார். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் முகமது ரிஸ்வானும் (52 இன்னிங்ஸ்களில்), மூன்றாவது இடத்தில் விராட் கோலியும் (56 இன்னிங்ஸ்களில்), நான்காவது இடத்தில் கே.எல்.ராகுலும் (58 இன்னிங்ஸ்களில்), 5-வது இடத்தில் ஆரோன் ஃபின்ச்சும் (62 இன்னிங்ஸ்களில்) உள்ளனர்.

இன்றையப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 20 ரன்கள் எடுக்கும்பட்சத்தில் அவர் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com