இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு; டெம்பா பவுமா, ரபாடா அணியில் இல்லை!

இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி இன்று (டிசம்பர் 4) அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு; டெம்பா பவுமா, ரபாடா அணியில் இல்லை!

இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி இன்று (டிசம்பர் 4) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகள் டிசம்பர் 10 முதல் தொடங்கவுள்ளன. தென்னாப்பிரிக்காவுக்கு  எதிரான தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டநிலையில், இன்று தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில்  தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா மற்றும் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா அணியில் இடம்பெறவில்லை. டெம்பா பவுமா மற்றும் ரபாடா இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளனர். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அணியை அய்டன் மார்கரம் வழிநடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் விவரம்

டி20 தொடர்: அய்டன் மார்கரம் (கேப்டன்), ஓட்னியல் பார்ட்மன், மேத்யூ ப்ரீட்ஸ்க், நண்ட்ரே பர்ஜர், ஜெரால்டு கோட்டீஸ், டொனோவான் ஃபெரெரைரா, ரீஸா ஹென்ரிக்ஸ், மார்கோ ஜேன்சன், ஹென்ரிச் க்ளாசன், கேசவ் மகாராஜ், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, ஆண்டைல் பெஹ்லுக்வாயோ, ஷம்சி, டிரிஸ்டான் ஸ்டப்ஸ் மற்றும் லிசாத் வில்லியம்ஸ்.

ஒருநாள் தொடர்: அய்டன் மார்கரம் (கேப்டன்), ஓட்னியல் பார்ட்மன், நண்ட்ரே பர்ஜர், டோனி டி ஸார்சி, ரீஸா ஹென்ரிக்ஸ், ஹென்ரிச் க்ளாசன்,கேசவ் மகாராஜ், மிஹ்லாலி பொங்வானா, டேவிட் மில்லர், வியான் முல்டர், ஆண்டைல் பெஹ்லுக்வாயோ, ஷம்சி, ராஸி வாண்டர் துசென், கைல் வெரைன் மற்றும் லிசாத் வில்லியம்ஸ்.

டெஸ்ட் தொடர்: டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹம், நண்ட்ரே பர்ஜர், ஜெரால்டு கோட்டீஸ், டோனி டி ஸார்சி, டீன் எல்கர், மார்கோ ஜேன்சன், கேசவ் மகாராஜ், அய்டன் மார்கரம், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, கீகன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, டிரிஸ்டான் ஸ்டப்ஸ் மற்றும் கைல் வெரைன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com