மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

2-வது டி20: அயர்லாந்துக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே!

அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் குவித்துள்ளது.

News image
Updated On :9 டிசம்பர் 2023, 12:42 pm

DIN

அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் குவித்துள்ளது.

அயர்லாந்து அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே ஒரு விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்ற நிலையில் இன்று (டிசம்பர் 9) இரண்டாவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. 

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளைவ் மடாண்ட் 44 ரன்கள் குவித்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ரியான் பர்ல் 38 ரன்கள் குவித்தார். அதில் 3 சிக்ஸர்கள் அடங்கும். அயர்லாந்து தரப்பில் மார்க் அடார் 2 விக்கெட்டுகளையும், கிரைக் யங், கேரித் டெலானி மற்றும் கர்டிஸ் கேம்பர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி களம் காண்கிறது. ஏற்கனவே, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் ஜிம்பாப்வே இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் களம் காண்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.