ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய அயர்லாந்து!
ஜிம்பாப்வேவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அயர்லாந்து டி20 தொடரைக் கைப்பற்றியது.


ஜிம்பாப்வேவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அயர்லாந்து டி20 தொடரைக் கைப்பற்றியது.
அயர்லாந்து அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரின் மூன்றாவது போட்டி இன்று (டிசம்பர் 10) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, ஜிம்பாப்வே முதலில் பேட் செய்தது.
ஜிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் குவித்தது. அந்த அணியில் கேப்டன் ரியான் பர்ல் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கிளைவ் மடாண்ட் மற்றும் பிரியன் பென்னட் தலா 27 ரன்கள் எடுத்தனர். அயர்லாந்து தரப்பில் ஜோஷ்வா லிட்டில், கேரத் டெலானி மற்றும் கிரைக் யங் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து களமிறங்கியது. அந்த அணிக்குத் தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களான ஆண்ட்ரூ பால்பிர்னி 13 ரன்களிலும், கேப்டன் பால் ஸ்டிர்லிங் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய லோர்கான் டக்கர் 8 ரன்களிலும், கர்டிஸ் கேம்பர் 5 ரன்களிலும் ஆட்டமிழக்க அயர்லாந்து 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில், ஹாரி டெக்டார் மற்றும் ஜியார்ஜ் டாக்ரெல் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடி அயர்லாந்தை வெற்றி பெறச் செய்தது.
இதையும் படிக்க: வரலாற்று வெற்றி குறித்து கேப்டன் ஷாய் ஹோப் நெகிழ்ச்சி!
18.4 ஓவர்களில் அயர்லாந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. டி20 தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சிறப்பாக விளையாடிய ஹாரி டெக்டார் 54 ரன்களுடனும் (3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள்), ஜியார்ஜ் டாக்ரெல் 49 ரன்களுடனும் (3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள்) களத்தில் இருந்தனர்.
ஜியார்ஜ் டாக்ரெல் ஆட்ட நாயகனாகவும், ஹாரி டெக்டார் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...