இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணி நாட்டுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் விளையாட சென்றுள்ளன. இதில் ஒருநாள் தொடரில் 2-1 என வென்று அசத்தியுள்ளது.
முதல் போட்டியில் மே.இ.தீ. அணி வென்றது. 2வது போட்டி இங்கிலாந்து வென்றது. 3வது போட்டியில் முதலில் ஆடிய 40 ஓவர் முடிவில் இங்கிலாந்து 206/9 ரன்கள் எடுத்தது. மழைக் காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டது. அதிகபட்சமாக பென் டக்கெட் 71, லிவிங்ஸ்டன் 45 ரன்களும் எடுத்தனர்.
மே.இ.தீ. அணி சார்பில் மேத்யூ ஃபோர்டு, அல்ஜாரி ஜோசப் தலா 3 விக்கெட்டுகளையும், ரோமியோ ஷெஃபார்டு 2விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய மே.இ.தீ. அணி 31.4 ஓவர்களில் 191/6 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. அலிக் அதான்ஸா 45, கீசி கார்டி 50 ரன்களும் இறுதியில் ரோமியோ ஷெஃபார்டு 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.
மேத்யூ ஃபோர்டு ஆட்ட நாயகன் விருது பெற சாய் ஹோப் தொடர் நாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் தங்களது சொந்த மண்ணில் 25 வருடங்களுக்குப் பிறகு இருதரப்பு ஒருநாள் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளனர் மே.இ.தீ. அணியினர்.
சாம்பியன் அணியான மே.இ.தீ. அணி கடந்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் தேர்வாகாதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இந்த வெற்றி அவர்களுக்கு புத்துணர்வை தருவதாக இருக்குமென கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வணிக சிலிண்டர் விலை உயர்வு: வைகோ கண்டனம்

நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் கே.சி. வேணுகோபால்!

காா்கே, சோனியா, ராகுல் முடிவை ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம்: சிவகுமாா்
மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


