ஊடக அறையின் கண்ணாடியை உடைத்த ரிங்கு சிங்!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஃபினிஷராக வலம்வரும் ரிங்கு சிங், நேற்றைய போட்டியில் ஊடக அறையின் கண்ணாடியை உடைத்த காணொலி வைரலாகி வருகின்றது.
ஊடக அறையின் கண்ணாடியை உடைத்த ரிங்கு சிங்!


இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஃபினிஷராக வலம்வரும் ரிங்கு சிங், நேற்றைய போட்டியில் ஊடக அறையின் கண்ணாடியை உடைத்த காணொலி வைரலாகி வருகின்றது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் செவ்வாய்க்கிழமை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஏமாற்றினாலும், சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங்கின் அதிரடியால் இந்திய அணி 180 ரன்கள் குவித்தது.

இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடி ரிங்கு சிங் 39 பந்துகளில் 68 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.

இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் மார்க்ரம் வீசிய 19-வது ஓவர் 4, 5-வது பந்துகளை அடுத்தடுத்து சிக்ஸர் அடித்து விளாசினார் ரிங்கு சிங். அந்த பந்து ஊடக அறையின் மீது விழுந்ததில் அறையின் கண்ணாடி நொறுங்கியது.

தற்போது ரிங்கு சிங் அடித்த அந்த சிக்ஸரின் காணொலி மற்றும் உடைந்த கண்ணாடியின் புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com