நாள்பட்ட சிறுநீரக நோயால் அவதிப்படும் ஆஸ்திரேலிய வீரர்!

நாள்பட்ட சிறுநீரக நோயுடன் போராடி வருவதாக ஆஸ்திரேலிய அணியின் கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.
நாள்பட்ட சிறுநீரக நோயால் அவதிப்படும்  ஆஸ்திரேலிய வீரர்!

நாள்பட்ட சிறுநீரக நோயுடன் போராடி வருவதாக ஆஸ்திரேலிய அணியின் கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும்  பாகிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமிடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் இன்று (டிசம்பர் 14) தொடங்கியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் கேமரூன் கிரீன் இடம்பெறவில்லை. 

இந்த நிலையில், நாள்பட்ட சிறுநீரக நோயுடன் போராடி வருவதாக ஆஸ்திரேலிய அணியின் கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: நான் பிறந்தபோது எனது பெற்றோரிடம் எனக்கு  நாள்பட்ட சிறுநீரக நோய் இருக்குமென மருத்துவர்கள் கூறியுள்ளனர். நான் 12 வயது வரை மட்டுமே உயிருடன் இருப்பேன் எனவும்  கூறியுள்ளார்கள். இந்த சிறுநீரக நோயின் அறிகுறிகள் வெளியில் தெரியாது. இந்த நாள்பட்ட சிறுநீரக நோய் கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீரகத்தின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும். எனது சிறுநீரக பாதிப்பு இரண்டாவது கட்டத்தில் உள்ளது.

எனக்கு சிறிது அதிர்ஷ்டம் இருக்கிறது என நினைக்கிறேன். நாள்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் ரீதியாக பெரிய அளவில் சிரமங்களை எதிர்கொள்வார்கள். ஆனால், நான் உடல்ரீதியாக பெரிய அளவிலான சிரமங்களை சந்திக்கவில்லை. சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால் அவற்றை பழைய நிலைக்கு எடுத்துச் செல்ல முடியாது. சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com