ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தும் ஹார்திக் பாண்டியா!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :15 டிசம்பர் 2023, 1:57 pm

DIN

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஹார்திக் பாண்டியா தான் அங்கம் வகித்த அணியான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மீண்டும் இணைந்தார். கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணியை பாண்டியா கேப்டனாக வழிநடத்தி வந்தார். அவர் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவதாக எடுத்த முடிவுக்கு மதிப்பளித்து அவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேடிங் முறையில்  விற்றது குஜராத் டைட்டன்ஸ்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹார்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக மாறுவாரா அல்லது ஒரு வீரராக தொடர்வாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அந்த கேள்விக்கான விடையை இன்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மும்பை அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியாவை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: புதிய தொடக்கத்திற்கு எங்களது வாழ்த்துகள் எனக் கூறப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.