
இந்திய அணி தற்போது டி20, ஒருநாள், டெஸ்ட் தொடா்களில் ஆடுவதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. முதலில் டி20 தொடா் முடிந்தது, அதை சமன் செய்தது இந்தியா.
இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் ஒருநாள் தொடா் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாண்டரா்ஸ் மைதானத்தில் முதல் ஆட்டம் தொடங்கியுள்ளது.
பேட்டிங்குக்கு சாதகமான இந்த மைதானத்தில் கே.எல். ராகுல் தலைமையில் ஒருநாள் அணி களமிறங்குகிறது. கடைசியாக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்து இந்தியா குறிப்பிடத்தக்கது.
தற்போது, டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் பவுமா, ரபாடா, டி காக் ஆகியோா் இல்லை. மாா்க்கரம் தலைமையில் அந்த அணியும் புதுப் பொலிவைப் பெற்றுள்ளது.
இந்திய அணியில் வீரர்கள்: ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல் (கேப்டன்), சாய் சுதர்ஷன், ஸ்ரேயாஷ் ஐயர், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், அக்ஷர் படேல், அர்ஷதீப் சிங், ஆவேஷ் கான், குல்தீப், முகேஷ் குமார்.
சாய் சுதர்ஷன் முதன்முறையாக ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறார். சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.