டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எடுத்த நேதன் லயன்!

பிரபல ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எடுத்த நேதன் லயன்!

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 14-இல் தொடங்கியது.

இந்த டெஸ்ட் தொடரில் புதிய சாதனையை ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான நாதன் லயன் நிகழ்த்தியுள்ளார்.

4-ஆம் நாள் ஆட்டத்தில் லயன் 27.1 வது ஓவரில் பஹீம் அஸ்ரஃப் விக்கெட்டினை எடுத்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை எடுத்த சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 487, 2வது இன்னிங்ஸில் 233/5 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் 1,2வது இன்னிங்ஸ் முறையே 271, 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

360 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி மிகப் பெரிய வெற்றியினை பெற்றுள்ளது. இதன் மூலம் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

ஆஸ்திரேலியாவுக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் 36 வயதான நேதன் லயன். 

  1. ஷேன் வார்னே- 708 விக்கெட்டுகள் (145 போட்டிகள்) 
  2. க்ளென் மெக்ரத் - 563 விக்கெட்டுகள் (124 போட்டிகள்) 
  3. நேதன் லயன் - 500 விக்கெட்டுகள் (123 போட்டிகள்) 

இந்த வரிசையில் மிட்செல் ஸ்டார்க் 83 போட்டிகளில் 338 விக்கெட்டுகளுடன் 5வது இடத்தில் இருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com