துபை: துபையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும், ரிஷப் பந்தும் டென்னிஸ் விளையாடிய விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
ஐபிஎல் 2024 போட்டிக்கான மினி ஏலம் கடந்த செவ்வாய்க்கிழமை துபையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் தோனி கேப்டனாக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், பந்த் கேப்டனாக உள்ள தில்லி கேபிடல்ஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்றன.
இந்த ஏலத்தில் நேரடியாக பங்கேற்கவில்லை என்றாலும் அணியின் நிர்வாகத்துக்கு ஆலோசனை வழங்குவதற்காக துபைக்கு தோனி சென்றிருந்தார்.

அதேபோல், சாலை விபத்தில் காயமடைந்து மீண்டும் உடல்தகுதி பெற்று வரும் தில்லி அணியின் கேப்டன் பந்த் இந்தாண்டு ஐபிஎல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், துபைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், ஏலம் முடிந்த பிறகும் துபையில் தங்கியிருக்கும் தோனியும், பந்தும் டென்னிஸ் விளையாடும் விடியோ ஒன்று புதன்கிழமை இணையத்தில் வைரலானது.
மேலும், தோனி, பந்த் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திமுக அரசைக் கண்டித்து நாளை(மார்ச் 17) மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்: இபிஎஸ்

பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெக

பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்..! ஆஸ்கர் மேடையில் ஹாலிவுட் நடிகரின் பேச்சு!

அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்! விளம்பரங்கள் மீது பெயிண்ட் அடிக்கும் பணி தீவிரம்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

