ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் மேலும் ஒரு பாகிஸ்தான் வீரர்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நோமன் அலி விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் மேலும் ஒரு பாகிஸ்தான் வீரர்!
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நோமன் அலி விலகியுள்ளார்.

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு இன்னும்  இரண்டு நாள்களே இருக்கும் நிலையில், பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் நோமன் அலி மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். 

ஏற்கனவே பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் குர்ரம் ஷாசத் காயம் காரணமாக விலகிய நிலையில், அந்தப் பட்டியலில் தற்போது நோமன் அலியும் இணைந்துள்ளார். 

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் நோமன் அலிக்கு நேற்று திடீரென தீவிர வயிற்று வலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவருக்கு ஸ்கேன் செய்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு குடல் அழற்சி இருப்பது உறுதியானது. அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கடைசி 15 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் கடந்த 1995 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com