ஐஎஸ்பிஎல் கிரிக்கெட்: சென்னை அணியை வாங்கிய சூர்யா!

இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் உரிமத்தை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். 
ஐஎஸ்பிஎல் கிரிக்கெட்: சென்னை அணியை வாங்கிய சூர்யா!

இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் உரிமத்தை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். 

இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) டி10 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்தத் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 19 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்த டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடரின் அனைத்துப் போட்டிகளும் கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. இத்தொடரில் மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும்  ஸ்ரீநகரைச் சேர்ந்த 6 அணிகள் பங்கேற்கவுள்ளன. 

இந்த நிலையில், சென்னை அணியின் உரிமத்தை நடிகர் சூர்யா வாங்கியுள்ளதாக அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கெனவே, மும்பை அணி உரிமத்தை அமிதாப் பச்சன், ஹைதராபாத் உரிமத்தை ராம் சரண், பெங்களூரு உரிமத்தை ஹிருத்திக் ரோஷன், ஜம்மு - காஷ்மீர் அணியின் உரிமத்தை அக்சய் குமார் வாங்கியுள்ளனர்.

இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) போட்டியில் பங்குபெறும் அணி ஒன்றில் 16 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஒரு அணிக்கு உதவிப் பணியாளார்கள் 6 பேர் இருக்கலாம். ஒவ்வொரு அணிக்கும் ஒரு கோடி ரூபாய் ஏலத் தொகையாக வழங்கப்படும். வீரர்களுக்கான ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர் ஒருவருக்கான குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வரம்பு என்பது கிடையாது. 

சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களைப் போன்று விளையாட வேண்டும் என்ற கனவோடு உள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்காக இந்தப் புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com