23 வயதில் இத்தனை சாதித்திருக்கிறாரா ஷுப்மன் கில்?

23 வயதில் இத்தனை சாதித்திருக்கிறாரா ஷுப்மன் கில்?

ஷுப்மன் கில் இல்லாத இந்திய அணியை நினைத்துப் பார்க்க முடியாது என்கிற அளவுக்கு...

ஷுப்மன் கில் இல்லாத இந்திய அணியை நினைத்துப் பார்க்க முடியாது என்கிற அளவுக்குத் தொடர்ந்து சதங்கள் அடித்து சாதனை படைத்து வருகிறார்.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 ஆட்டத்தில் இளம் வீரா் ஷுப்மன் கில்லின் சூறாவளி ஆட்டத்தால் 168 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா. 63 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 126 ரன்கள் எடுத்து அசத்தினார் ஷுப்மன் கில். டி20 கிரிக்கெட்டில் தனிநபராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்.  2023 தொடங்கிய 1 மாதம் 1 நாளில் 3 சதங்களும் ஒரு இரட்டைச் சதமும் எடுத்துள்ளார். 

23 வயதான ஷுப்மன் கில் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் நிகழ்த்தியுள்ள சாதனைகள்:

* யு19 உலகக் கோப்பையை வென்றுள்ளார். (2018-ல்)

* 2021-ல் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார். (பிரிஸ்பேனில் 2-வது இன்னிங்ஸில் 91 ரன்கள் எடுத்தார்.)

* ஐபிஎல் போட்டியை வென்றுள்ளார். (2022-ல் குஜராத் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. ஷுப்மன் கில், 16 ஆட்டங்களில் 4 அரை சதங்களுடன் 483 ரன்கள் எடுத்தார்.)

* டி20 கிரிக்கெட்டில் தனிநபராக அதிக ரன்கள். (இதற்கு முன்பு விராட் கோலி 122 ரன்கள் எடுத்திருந்தார். அதை நேற்று முறியடித்தார் கில்.)

* யு-19 உலகக் கோப்பை, டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்திலும் சதமடித்துள்ளார்.

* ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம்.

* டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் சதங்கள் அடித்த இந்திய வீரர்கள் - கோலி, ரோஹித் சர்மா, ராகுல், ரெய்னா, ஷுப்மன் கில். 

* ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்கள், டெஸ்ட், டி20யில் 100 ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் - ரோஹித் சர்மா, ஷுப்மன் கில். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com