மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ரஞ்சி கோப்பை: அரையிறுதிக்குத் தகுதி பெற்ற இரு அணிகள்!

பெங்களூரில் நடைபெற்ற காலிறுதியில் உத்தரகண்ட் அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 281 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது...

News image

கர்நாடக அணி

Updated On :3 பிப்ரவரி 2023, 9:52 am

ரஞ்சி கோப்பைப் போட்டியில் பெங்கால், கர்நாடகம் ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.

பெங்களூரில் நடைபெற்ற காலிறுதியில் உத்தரகண்ட் அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 281 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கர்நாடகம் அணி. 161 ரன்களும் 3 விக்கெட்டுகளும் எடுத்த ஷ்ரேயஸ் கோபால், ஆட்ட நாயகனாகத் தேர்வானார். கர்நாடகம் அணி முதல் இன்னிங்ஸில் 162.5 ஓவர்களில் 606 ரன்கள் குவித்ததால் எளிதான வெற்றி கிடைத்தது. உத்தரகண்ட் அணி இரு இன்னிங்ஸிலும் 116, 209 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற காலிறுதியில் ஜார்கண்ட் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்கால் அணி. ஜார்கண்ட் அணி இரு இன்னிங்ஸிலும் 173, 221 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது. பெங்கால் அணி முதல் இன்னிங்ஸில் 328 ரன்களும் 2-வது இன்னிங்ஸில் 69/1 என எடுத்து வெற்றி பெற்றது. 6 விக்கெட்டுகள் எடுத்த ஆகாஷ் தீப், ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.