5 அணிகள், ஒட்டுமொத்தமாக 22 ஆட்டங்கள், ஒவ்வொரு அணியிலும் 18 வீராங்கனைகள். ஆறு வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு அனுமதி. ஆட்டத்தில் விளையாடும் 11 வீராங்கனைகளில் 5 வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு அனுமதி வழங்கப்படும். அந்த 5 வீராங்கனைகளில் ஒரு வீராங்கனை அசோசியேட் நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
மகளிர் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையையும் ரிலையன்ஸின் வையாகாம் நிறுவனம் பெற்றுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ரூ. 951 கோடி தர ஒப்புக்கொண்டுள்ளது. அதாவது ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ரூ. 7.09 கோடி. இந்த உரிமை இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் அனைத்து விதமான ஊடகங்களுக்கும் (தொலைக்காட்சி, டிஜிடல்) பொருந்தும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்த பாகிஸ்தான் வீரர்! (விடியோ)
மகளிர் ஐபிஎல் மும்பையில் மார்ச் 4 முதல் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. டி.ஒய்.பாட்டில் ஆடுகளத்தில் தொடக்க ஆட்டம் நடைபெறும். ஏலத்தில் பங்கேற்ற 1525 வீராங்கனைகள் பதிவு செய்த நிலையில், இறுதிப்பட்டியலில் 409 வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுள்ளனர். 246 இந்திய வீராங்கனைகலும், 163 வெளிநாட்டு வீராங்கனைகளும் வருகிற 13ஆம் தேதி மும்பையில் நடக்கும் ஏலத்தில் பங்கெபெறுவர் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ஆஷஸ் தொடரைவிட மிகப்பெரியது இந்தியாவை வெல்வது: ஸ்டீவ் ஸ்மித்
ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிரிதி மந்தனா, தீப்தி சர்மா, ஷெபாலி வர்மா உள்ளிட்ட முக்கியமான 24 வீராங்கனைகள் அதிகபட்சமான விலை ரூ.50 இலட்சத்திற்கு ரிசர்வ் செய்யப்பட்டுள்ளனர்.
ஏலம் பிப்.13ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு நடைபெறும்.