‘சர்வதேச போட்டிகளில் 31வது முறையாக...’- அஸ்வின் புதிய சாதனை! 

பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் ரவி அஸ்வின் புதிய சாதனையை படைத்துள்ளார். 
‘சர்வதேச போட்டிகளில் 31வது முறையாக...’- அஸ்வின் புதிய சாதனை! 

பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை சனிக்கிழமை வீழ்த்தியது. 

இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் அசத்தலான பேட்டிங்கால் 400 ரன்கள் சோ்த்த இந்தியா, 2-ஆவது இன்னிங்ஸில் அட்டகாசமான பௌலிங்கால் ஆஸ்திரேலியாவை 91 ரன்களுக்குள்ளாக ஆட்டமிழக்கச் செய்தது. அஸ்வின் மீது ஆஸ்திரேலியா கொண்டிருந்த அச்சத்தை நிரூபிக்கும் வகையில் 5 விக்கெட்டுகள் சாய்த்து அபாரம் காட்டினாா் அவா்.

அஸ்வினுக்கு எதிராக ஆஸி. இடதுகை பேட்டர்கள் மிகவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அஸ்வின் பந்து வீச்சினை சமாளிக்க அவரைப் பொலவே பந்துவீசும் மகேஷ் பிதியா என்பவரைக் கொண்டு வலைப்பயிற்சியில் ஆஸி. பேட்டர்கள் பயிற்சி மேற்கொண்டனர். இருப்பினும் அஸ்வினின் சுழல் பந்தினை சமாளிக்க முடியவில்லை. 

அஸ்வின் அபாரமாக பந்து வீசி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும் எடுத்தார். மொத்தமாக முதல் டெஸ்டில் 8 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை அஸ்வின் 31வது முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் மட்டும் இதுவரை 25முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதற்குமுன் இந்திய வீரர் அனில் கும்ப்ளே இந்தச் சாதனையை படைத்துள்ளார். கும்ளேவுடன் இந்த சாதனையை சமன் செய்துள்ளார் ரவி அஸ்வின். 

உலக அளவில் முத்தையா முரளிதரன் 67முறை 5 விக்கெட்டுகளை எடுத்து முதலிடத்தில் உள்ளார். ஷேன் வார்னே (37)இரண்டாமிடம். ரவி அஸ்வின் 7வது இடத்தில் உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com