டபிள்யூபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வான வீராங்கனைகளின் பட்டியல்!

டபிள்யூபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வான முதல் 10 வீராங்கனைகள்
டபிள்யூபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வான வீராங்கனைகளின் பட்டியல்!

மும்பையில் நேற்று நடைபெற்ற டபிள்யூபிஎல் ஏலத்தில் இந்திய வீராங்கனை மந்தனா அதிகபட்ச ஏலத்தொகைக்குத் தேர்வாகியுள்ளார்.

பிசிசிஐ சாா்பில் ஆடவருக்கு என ஐபிஎல் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடா் உலகின் பணம் கொழிக்கும் போட்டியாக திகழ்கிறது. இதில் பங்கேற்று ஆட பல்வேறு வெளிநாட்டு வீரா்களும் தீவிர ஆா்வம் காண்பிக்கின்றனா். முதன்முதலாக மகளிா் ப்ரீமியா் லீக் (டபிள்யுபிஎல்) போட்டியை நடத்த பிசிசிஐ தீா்மானித்துள்ளது. மொத்தம் 5 அணிகள் இதில் இடம் பெறுகின்றன. இந்த அணிகளின் ஏலம் மூலம் பிசிசிஐக்கு ரூ. 4,670 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதன் செயலாளா் ஜெய் ஷா கூறியுள்ளாா். கடந்த 2008-இல் ஆடவா் ஐபிஎல் தொடா் தொடங்கப்பட்ட போது கிடைத்த தொகையை விட இது அதிகம் ஆகும்.

டபிள்யூபிஎல் போட்டி மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

டபிள்யூபிஎல் போட்டியில் ஆமதாபாத், மும்பை, பெங்களூரு, தில்லி, லக்னெள ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தும் அணிகள் போட்டியிடுகின்றன. குஜராத் ஜெயண்ட்ஸ் (ஆமதாபாத்) அணியை அதானி நிறுவனம் ரூ. 1,289 கோடிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியை இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூ. 912.99 கோடிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ராயல் சேலஞ்சர்ஸ் நிறுவனம் ரூ. 901 கோடிக்கும் தில்லி கேபிடல்ஸ் அணியை ஜேஎஸ்டபிள்யூ ஜிஎம்ஆர் நிறுவனம் ரூ. 810 கோடிக்கும் உ.பி. வாரியஸ் (லக்னெள) அணியை கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரூ. 757 கோடிக்கும் பெற்றுள்ளன. 

மும்பையில் நேற்று நடைபெற்ற டபிள்யூபிஎல் ஏலத்தில் இந்திய வீராங்கனை மந்தனா அதிகபட்ச ஏலத்தொகைக்குத் தேர்வானார். ரூ. 3.4 கோடிக்கு ஆர்சிபி அணி அவரைத் தேர்வு செய்தது. 

டபிள்யூபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வான முதல் 10 வீராங்கனைகள்

1. மந்தனா (ஆர்சிபி) - ரூ. 3.4 கோடி
2. ஆஷ்லி கார்ட்னர் (குஜராத்) - ரூ. 3.2 கோடி
3. நாட் சிவர்-பிரண்ட் (மும்பை) - ரூ. 3.2 கோடி
4. தீப்தி சர்மா (லக்னெள) - ரூ. 2.6 கோடி
5. ஜெமிமா (தில்லி) - ரூ. 2.2 கோடி
6. பெத் மூனி (குஜராத்) - ரூ. 2 கோடி
7. ஷஃபாலி வர்மா (தில்லி) - ரூ. 2 கோடி
8. பூஜா வஸ்த்ரகர் (மும்பை) - ரூ. 1.9 கோடி
9. ரிச்சா கோஷ் (ஆர்சிபி) - ரூ. 1.9 கோடி
10. சோஃபி எக்லஸ்டோன் (லக்னெள) - ரூ. 1.8 கோடி
ஹர்மன்ப்ரீத் கெளர் (மும்பை) - ரூ. 1.8 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com