ஐசிசி தரவரிசை: முதல் இடத்தை நெருங்கும் அஸ்வின்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின், 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.


டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின், 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவில் 25 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். இதன்மூலம் இதே இலக்கைத் தொட்ட கும்ப்ளேவின் சாதனையைச் சமன் செய்துள்ளார். கும்ப்ளே 115 இன்னிங்ஸிலும் அஸ்வின் 101 இன்னிங்ஸிலும் நிகழ்த்தியுள்ளார்கள்.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் அஸ்வின். அதேபோல ஜடேஜா 16-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் உள்ள கம்மின்ஸை விடவும் 21 தரவரிசைப் புள்ளிகள் பின்தங்கியுள்ளார் அஸ்வின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...