2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் மாற்றங்கள் குறித்து பேசிய பேட் கம்மின்ஸ்!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் என்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்பது குறித்து அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியுள்ளார்.
2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் மாற்றங்கள் குறித்து பேசிய பேட் கம்மின்ஸ்!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் என்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்பது குறித்து அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை (பிப்ரவரி 17) தில்லியில் தொடங்குகிறது.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ்ஆஸ்திரேலிய அணியில் என்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்பது குறித்து பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியதாவது: இரண்டாவது டெஸ்டில் டிராவிஸ் ஹெட் சேர்க்கப்படுவது தொடர்பான ஆலோசனை நடைபெறுகிறது. டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடுகிறார். அவர் சிறப்பாக விளையாடுவதில் கவனம் செலுத்துகிறார். அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர். அவர் அணியில் இடம்பெற்றால் அணிக்கு அது பலமாக அமையும். டேவிட் வார்னர் அடுத்து வரும் போட்டிகளில் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தினை வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன். நான் அணியினைத் தேர்வு செய்யும் நபர் கிடையாது. இருப்பினும், அணியில் வார்னர் இடம்பெறுவார் என நம்புகிறேன். பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தார். அவருக்கு பந்து வீசுவது என்பது கடினமான ஒன்று. உங்களுக்கு அனைத்துப் பந்துகளும் ஷாட் அடிப்பது போல் வீசப்படாது. அது வார்னருக்கும் நன்றாகத் தெரியும்.

சுழல்பந்துவீச்சு குறித்து அதிகம் பேசப்படுகிறது என எனக்குத் தெரியும். ஆனால், புதிய பந்தில் சுழல்பந்தினை சமாளிப்பது சற்று கடினம். தில்லி டெஸ்டில் அணியில் மிட்செல் ஸ்டார்க் இணைந்துள்ளார். அதேபோல் ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனும் அணியில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் நேற்று சிறப்பாக பயிற்சி மேற்கொண்டார்கள். இருப்பினும், ஆஸ்திரேலியாவின் ஆடும் லெவன் இன்னும் முடிவாகவில்லை. கேமரூன் கிரீன் சிறந்த ஆட்டக்காரர். அவர் அணியில் இடம்பெறுவது அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும். மிட்செல் ஸ்டார்க் தனது சிறப்பான பங்களிப்பை வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com