சமூகவலைத்தளங்களில் என்னைப் பற்றி நல்லவிதமாகப் பேசினாலும்...: புஜாரா

என்னுடைய முதல் டெஸ்டை விளையாடும்போது பிற்காலத்தில் 100 டெஸ்டுகளில் விளையாடுவேன் என...
சமூகவலைத்தளங்களில் என்னைப் பற்றி நல்லவிதமாகப் பேசினாலும்...: புஜாரா

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட், தில்லியில் வெள்ளியன்று தொடங்குகிறது. 2017-க்குப் பிறகு தில்லியில் டெஸ்ட் ஆட்டம் நடைபெறவுள்ளது. தில்லியில் தனது 100-வது டெஸ்டை விளையாடவுள்ளார் புஜாரா. இதுவரை விளையாடிய 99 டெஸ்டுகளில் 19 சதங்களுடன் 7021 ரன்கள் எடுத்துள்ளார். 100-வது டெஸ்டை விளையாடும் புஜாரா, பிரதமரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் புஜாரா கூறியதாவது:

என்னுடைய முதல் டெஸ்டை விளையாடும்போது பிற்காலத்தில் 100 டெஸ்டுகளில் விளையாடுவேன் என நான் எண்ணிப் பார்க்கவில்லை. சமகாலத்தில் வாழ்வதே என்னுடைய சுபாவம். கிரிக்கெட்டில் தொடர்ச்சியான பயணத்தில் 100 டெஸ்டுகளில் விளையாடும் வாய்ப்பு அமையும். இதை யாராலும் கணிக்க முடியாது. நல்லவிதமாக விளையாடி வந்தால் அது தானாகக் கிடைக்கும். 

உங்களுக்கென்று உள்ள சில நடைமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றவேண்டும். யோகா, தியானம், உடற்தகுதியில் கவனம் செலுத்துவது, நல்லவிதமாக எழுதினாலும் தொலைக்காட்சி, சமூகவலைத்தளங்களில் என்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதைப் பார்க்காமல் இருப்பது என எனக்கென்று சில கொள்கைகள், வாழ்க்கைமுறைகள் உள்ளன. ஆட்டத்தில் பொறுமை தானாக வராது. அதற்கு மனவலிமை வேண்டும். நம் திறமையில் கவனம் செலுத்தினால் வெற்றிகள் தானாக அமையும். ஒரு வருடத்துக்குச் சராசரியாக 9 டெஸ்டுகளில் விளையாடுகிறோம். உள்ளூர் போட்டிகளில் இல்லாவிட்டால் கிரிக்கெட்டுடன் பெரிதளவில் தொடர்பு இருக்காது. எனவே தொடர்ந்து பயிற்சிகள் எடுக்க வேண்டும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com