கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்று: முதல் நாளில் செளராஷ்டிரம் ஆதிக்கம்!

ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றில் பெங்கால் அணி முதல் இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

News image
Updated On :16 பிப்ரவரி 2023, 11:34 am

DIN

ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றில் பெங்கால் அணி முதல் இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

ரஞ்சி கோப்பை இறுதி ஆட்டம் ஈடன் கார்டன்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற செளராஷ்டிர அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. 

உனாட்கட், சகாரியா ஆகியோரின் அசத்தலான பந்துவீச்சில் தடுமாறினார்கள் பெங்கால் பேட்டர்கள். 2 ஓவர்களுக்குள் 2 ரன்களுக்கு முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்தது பெங்கால் அணி. இதனால் முதல் இன்னிங்ஸில் 54.1 ஓவர்களில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசி 4 விக்கெட்டுகள் 8 ரன்களுக்கு வீழ்ந்தன. ஷாபாஸ் அஹமது 69, அபிஷேக் போரல் 50 ரன்கள் எடுத்தார்கள். செளராஷ்டிர அணியின் உனாட்கட், சகாரியா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். 

இதன்பிறகு முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய செளராஷ்டிரம் அணி, முதல் நாள் முடிவில் 17 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. ஹர்விக் தேசாய் 38, சகாரியா 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.