145 வருடங்களில் முதல்முறை: புதிய சாதனை படைத்த ஹாரி புரூக்!

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் சதமடித்த இங்கிலாந்து பேட்டர் ஹாரி புரூக், புதிய சாதனையைப் படைத்துள்ளார். 
145 வருடங்களில் முதல்முறை: புதிய சாதனை படைத்த ஹாரி புரூக்!


நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் சதமடித்த இங்கிலாந்து பேட்டர் ஹாரி புரூக், புதிய சாதனையைப் படைத்துள்ளார். 

முதல் டெஸ்டை இங்கிலாந்து அணி வென்ற நிலையில் 2-வது டெஸ்ட், வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

எதிர்பாராதவிதமாக முதல் 3 விக்கெட்டுகளை 21 ரன்களுக்கு இழந்தது இங்கிலாந்து. ஆனால் 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜோ ரூட்டும் ஹாரி புரூக்கும் நிலைமையை மாற்றினார்கள்.  ரூட் ஓரளவு நிதானமாக விளையாட, வழக்கம்போல அதிரடியாக விளையாடினார் 24 வயது ஹாரி புரூக். ரூட் 122 பந்துகளில் அரை சதமெடுத்தார். புரூக், 107 பந்துகளில் சதமடித்தார். பிறகு 145 பந்துகளில் 150 ரன்களை எடுத்து நாள் முழுக்க பவுண்டரிகளாக அடித்துக்கொண்டிருந்தார். ரூட், 182 பந்துகளில் சதமடித்தார். 

இங்கிலாந்து அணி 65 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தைத் தொடர முடியாமல் போனது. இதனால் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்தது. ஹாரி புரூக் 184, ரூட் 101 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் இங்கிலாந்து பேட்டர் ஹாரி புரூக் இன்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் 800 ரன்களை குறைந்த இன்னிங்ஸில் (9) எடுத்த பேட்டர் என்கிற பெருமையை அடைந்துள்ளார். இதற்கு முன்பு இந்திய பேட்டர் வினோத் காம்ப்ளி, 9 இன்னிங்ஸில் 798 ரன்கள் எடுத்திருந்தார். ஹெர்பர்ட் (9 இன்னிங்ஸில் 780 ரன்கள்), கவாஸ்கர் (9 இன்னிங்ஸில் 778 ரன்கள்), எவர்டன் வீக்ஸ் (9 இன்னிங்ஸில் 777 ரன்கள்) ஆகியோர் 9 இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த இதர பேட்டர்கள். 

ஐபிஎல் ஏலத்தில் ஹாரி புரூக்கை ரூ. 13.25 கோடிக்குத் தேர்வு செய்தது சன்ரைசர்ஸ் அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com