அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ரன் அவுட்: கடுப்பில் பேட்டைத் தூக்கி எறிந்த ஹர்மன்ப்ரீத் கெளர் (விடியோ)

ஓய்வறைக்குத் திரும்பியபோது மைதானத்திலேயே தனது பேட்டை கோபத்துடன் கீழே எறிந்தார்.

News image
Updated On :24 பிப்ரவரி 2023, 10:04 am

DIN

எதிர்பாராமல் நேர்ந்த தவறால் ரன் அவுட் ஆன இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர், மைதானத்திலேயே தனது கோபத்தை வெளிப்படுத்தினார். 

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. அத்துடன், முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்றது ஆஸ்திரேலியா. இந்த ஆட்டத்தில் முதலில் ஆஸ்திரேலியா 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுக்க, இந்தியா 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களையே எட்டியது. 

கடந்த உலகக் கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்தியா, தற்போது அரையிறுதியிலேயே அதே அணியிடம் வீழ்ந்து வெளியேறியிருக்கிறது. இதனால், உலகக் கோப்பையை வெல்லும் இந்தியாவின் கனவு, இன்னும் கனவாகவே நீடிக்கும் நிலைக்குச் சென்றது.

இந்திய அணி நடுவரிசை பேட்டர்களான ஹர்மன்ப்ரீத் சிங்கும் ஜெமிமாவும் நன்கு விளையாடி வெற்றிக்கு அருகில் சென்றார்கள். எனினும் ஜெமிமா 43 ரன்களிலும் ஹர்மன்ப்ரீத் கெளர் 52 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டுக் கடைசியில் இந்திய அணி தோற்றது. அதிலும் ஹர்மன்ப்ரீத் கெளர் எதிர்பாராத விதத்தில் ரன் அவுட் ஆனார். 2-வது ரன் ஓடி வரும்போது பேட் ஆடுகளத்தில் இடறியதால் அவரால் கிரீஸைத் தொட முடியாமல் போனது.

இதனால் விரக்தியடைந்த ஹர்மன்ப்ரீத் கெளர், ஓய்வறைக்குத் திரும்பியபோது மைதானத்திலேயே தனது பேட்டை கோபத்துடன் கீழே எறிந்தார். பிறகு உள்ளே சென்றபிறகு தனது பேட்டைப் படிக்கட்டில் மீண்டும் ஓங்கி அடித்தார். அவருடைய கோபம் தணிய சிறிது நேரமானது. இந்திய அணி தோல்வியடைந்த பிறகு கண்ணீர் விட்டார் ஹர்மன்ப்ரீத் கெளர். அவருக்கு வீராங்கனைகள் ஆறுதல் சொன்னார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.