மகளிர் டி20 உலகக் கோப்பை: ஐசிசி அணியில் இடம்பெற்ற ஒரே ஒரு இந்திய வீராங்கனை!

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது ஐசிசி. 
மகளிர் டி20 உலகக் கோப்பை: ஐசிசி அணியில் இடம்பெற்ற ஒரே ஒரு இந்திய வீராங்கனை!

மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளைக் கொண்டு ஓர் அணியைத் தேர்வு செய்துள்ளது ஐசிசி அமைப்பு. 

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 8-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இறுதி ஆட்டத்தில் 19 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்துத் தோற்றது. 

இது டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்குக் கிடைத்த 6-வது சாம்பியன் பட்டமாகும். கடந்த 2018, 2020-ம் ஆண்டு போட்டிகளில் வாகை சூடிய ஆஸ்திரேலியா, தொடர்ந்து 3-வது முறையாக (ஹாட்ரிக்) தற்போதும் கோப்பையை வென்றிருக்கிறது. அந்த அணி இவ்வாறு ஹாட்ரிக் கோப்பை வெல்வது இது 2-வது முறையாகும். இதற்கு முன் 2010, 2012, 2014 ஆகிய ஆண்டுகளிலும் அந்த அணி தொடர்ந்து சாம்பியனானது குறிப்பிடத்தக்கது. ஆஸி. மகளிர் அணி கேப்டன் மெக் லேனிங், 2014, 2018, 2020, 2023 ஆகிய ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையையும் 2022 ஒருநாள் உலகக் கோப்பையையும் வென்று அதிக ஐசிசி பட்டங்களை (5) வென்ற கேப்டன் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். அடுத்த இடங்களில் 4 ஐசிசி கோப்பைகளுடன் ரிக்கி பாண்டிங்கும் 3 ஐசிசி கோப்பைகளுடன் தோனியும் உள்ளார்கள்.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளைக் கொண்டு ஓர் அணியை அறிவித்துள்ளது ஐசிசி. 

டி20 உலகக் கோப்பை: ஐசிசி அணியில் இடம்பெற்ற வீராங்கனைகள்

1. பிரிட்ஸ் (தெ.ஆ)
2. அலிஸா ஹீலி (ஆஸ்திரேலியா, விக்கெட் கீப்பர்)
3. லாரா வோல்வார்ட் (தெ.ஆ.)
4. நாட் சிவர் பிரண்ட் (இங்கிலாந்து, கேப்டன்)
5. ஆஷ் கார்ட்னர் (ஆஸ்திரேலியா)
6. ரிச்சா கோஷ் (இந்தியா)
7. சோஃபி எக்லஸ்டோன் (இங்கிலாந்து)
8. கரிஷ்மா (மே.இ. தீவுகள்)
9. ஷப்னிம் (தெ.ஆ.)
10. டார்சி பிரெளன் (ஆஸ்திரேலியா)
11. மேகன் ஷுட் (ஆஸ்திரேலியா)
12-வது வீராங்கனை - பிரண்டர்காஸ்ட் (அயர்லாந்து)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com