ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா விலகல்?

காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள பும்ரா, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா விலகல்?

காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள பும்ரா, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

29 வயது பும்ரா இந்தியாவுக்காக 30 டெஸ்டுகள், 72 ஒருநாள், 60 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபகாலமாகக் காயம், ஓய்வு போன்ற காரணங்களால் டி20 உலகக் கோப்பை உள்பட பல ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாகக் கடந்த செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தார்.

பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சையும் பயிற்சியும் பெற்று வந்த பும்ரா, முழு உடற்தகுதியை அடைந்துள்ளார். இதையடுத்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக 10, 12, 15 தேதிகளில் ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணி விளையாடவுள்ளது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக, ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா காயமில்லாமல் இருக்க வேண்டும் என்பதால் அதுவரை அவருக்கு ஓய்வளிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. தேவைப்பட்டால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா விளையாட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருநாள் ஆட்டத்துக்காக குவாஹாட்டி சென்ற இந்திய அணியில் பும்ரா இடம்பெறாதது இத்தகவலை உறுதிப்படுத்துவது போல உள்ளது. எனவே இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ விரைவில் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com