விதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

இந்திய டெஸ்ட் தொடர்: பயிற்சி ஆட்டம் இல்லாதது பற்றி முன்னாள் வீரர் கவலை!

இந்தியச் சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய அணி எவ்விதப் பயிற்சி ஆட்டத்திலும் விளையாடாதது குறித்து கவலை தெரிவித்துள்ளார்...

News image
Updated On :19 ஜனவரி 2023, 10:07 am

DIN

இந்தியச் சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய அணி எவ்விதப் பயிற்சி ஆட்டத்திலும் விளையாடாதது குறித்து கவலை தெரிவித்துள்ளார் ஆஸி. முன்னாள் வீரர் இயன் ஹீலி.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், பிப்ரவரி 9 முதல் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இந்திய அணி முதல் இரு டெஸ்டுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் மோதும் டெஸ்ட் பற்றி ஆஸி. முன்னாள் வீரர் இயன் ஹீலி கூறியதாவது:

இந்தியச் சுற்றுப்பயணத்தில் பயிற்சி ஆட்டங்கள் இல்லாதது பற்றி சமீபகாலமாக நன்றாக விளையாடி வரும் கவாஜா குறை கூறியுள்ளார். இரு டெஸ்டுகளுக்கு இடையே உள்ள நீண்ட இடைவெளியில் நன்றாக விளையாடாத வீரர்கள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவது நல்லது. இப்போது பயிற்சி ஆட்டம் எதுவும் இல்லாதபோது அவர்கள் எப்படி நன்றாக விளையாடுவார்கள்? மூன்று டெஸ்டுகளிலும் இடம் கிடைக்காத வீரர்களும் பயிற்சி ஆட்டங்கள் இல்லாததால் பாதிக்கப்படுவார்கள். எனக்குக் கொஞ்சம் கவலையாக உள்ளது. கவாஜாவுக்காக அல்ல. சில வீரர்கள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடித்தான் டெஸ்டுகளில் நன்றாக விளையாடுவார்கள் என்றார்.

முதல் டெஸ்ட் நாகபுரியில் பிப்ரவரி 13 அன்று நிறைவுபெறுகிறது. மீதமுள்ள டெஸ்டுகள் - தில்லி (பிப்ரவரி 17-21), தர்மசலா (மார்ச் 1-5), ஆமதாபாத் (மார்ச் 9-13) ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.