டெஸ்ட் தொடர்: ஆஸி. வர்ணனையாளர்களின் புதிய பட்டியல்!

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.
ஹேடன்
ஹேடன்

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், பிப்ரவரி 9 முதல் தொடங்குகிறது.

ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்த டெஸ்ட் தொடரில் வர்ணனையாளர்களாகப் பணியாற்றவுள்ள ஆஸி. முன்னாள் வீரர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

முதல் இரு டெஸ்டுகளில் மேத்யூ ஹேடன், மார்க் வாஹ் ஆகிய இருவரும் வர்ணனையாளர்களாகப் பணியாற்றவுள்ளார்கள். 3-வது மற்றும் 4-வது டெஸ்டுகளில் மார்க் வாஹ் இடம்பெற மாட்டார். அவருக்குப் பதிலாக மிட்செல் ஜான்சன் வர்ணனையாளராகப் பணியாற்றவுள்ளார். ஒருநாள் தொடரில் ஆரோன் ஃபிஞ்சும் மிட்செல் ஜான்சனும் வர்ணனையாளர் குழுவில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

சமீபத்தில், காதலியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாகச் செய்திகளில் இடம்பெற்றார் ஆஸி. முன்னாள் வீரர் கிளார்க். இந்தச் சர்ச்சை காரணமாக இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் வர்ணனையாளர் குழுவிலிருந்து கிளார்க் நீக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இதையடுத்து புதிய வர்ணனையாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com