நான் 80 வயது வரை உயிரோடு இருந்தால் அதிசயம்; 7 வருடமாக நோய் பாதிப்புள்ளது: ஆலன் பார்டர் உருக்கம்!

பிரபல ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆலன் பார்டர் நடுக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கோப்புப்படம் (ஏஎஃப்பி)
கோப்புப்படம் (ஏஎஃப்பி)

டெஸ்ட் போட்டிகளில் முதன்முதலாக 11,000 ரன்களை கடந்தவர் ஆலன் பார்டர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த  ஆலன் 2016 முதல் பார்கின்ஸன் எனப்படும் நடுக்குவாதம் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாதாக தெரிவித்துள்ளார். 7 வருடமாக பொதுமக்கள் கண்களில் படாமல் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி பார்டர்-கவாஸ்கர் போட்டி என இவரை கௌரவிக்கும் பொருட்டு ஆடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

156 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஆலன் 1994இல் 50.54 சராசரியுடன் ஓய்வு பெற்றார். இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் போட்டி வெள்ளிகிழமை இரவு முடிந்தவுடன் இந்த செய்தி வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பலரும் இதற்காக ஆறுதல் கூறிவருகின்றனர்.

நோய் குறித்து ஆலன் பார்டர் கூறியதாவது:

நான் எப்போதும் இன்ட்ரோவர்ட்டான மனிதன். மனிதர்கள் எனக்காக கவலைப் படுவதை நான் விரும்பவில்லை. நான் இந்த நோய் பாதிப்பை தெரிந்ததும் பயப்படவில்லை. தற்போது 68 ஆகிறது.  80 வயதினை எட்டினால் அதிசயம். அதுவரை உயிரோடு இருப்பது அதிசயமென மருத்துவர்களும் கூறியுள்ளார்கள். என்னால் இன்னொரு சதத்தினை அடிக்க முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com