செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

முதல் ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை எடுத்து ஷாஹீன் அப்ரிடி சாதனை! (விடியோ)

பிரபல பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி முதல் ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

News image

படம் : ட்விட்டர் | நட்டிங்ஹம்ஸ்ரி

Updated On :1 ஜூலை 2023, 6:13 am

DIN

பிரபல பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி முதல் ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி20 பிளாஸ்ட் போட்டிகளில் பிரபல பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி முதல் ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

ஷாஹீன் டி20 பிளாஸ்ட் போட்டியில் நட்டிங்ஹம்ஸ்ரி அணிகாக விளையாடி வருகிறார். வார்விக்ஸ்ரி அணிக்கு எதிரான போட்டியில் டி20 போட்டிகளில் யாரும் இதுவரை நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

முதல் இரண்டு பந்துகளில் 2 விக்கெட்டுகளும் பின்னர் கடைசி 2 பந்துகளில் மீதி 2 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார்.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் ஷாஹீன் ஷா அப்ரிடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.