தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முதன்முறையாக வர்ணனையாளராக களமிறங்கும் இஷாந்த் சர்மா! 

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா முதன்முறையாக வர்ணனையாளராக களமிறங்க உள்ளார். 

News image

கோப்புப் படம்

Updated On :10 ஜூலை 2023, 9:55 am

DIN

உலகின் தலைசிறந்த பேட்டரான ரிக்கி பாண்டிங்கின் விக்கெட்டினை 19வது வயதிலேயே எடுக்கும் போது இஷாந்த் சர்மா மீது கிரிக்கெட் ரசிகர்கள் பார்வை விழுந்தது. இந்தியாவில் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய 2வது வேகப்பந்து வீச்சாளரும் இவரேதான். 

105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இஷாந்த் சர்மா 311 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 2021ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இந்திய அணியில் வாய்ப்பில்லாமல் இருக்கிறார். 

80 ஒருநாள், 105 டெஸ்ட், 14டி20 போட்டிகள் விளையாடியுள்ள இஷாந்த் சர்மா முதன்முறையாக வர்ணணையாளராக களமிறங்க உள்ளார். 34 வயதான இஷாந்த் சர்மா  இந்தியா - மே.இ.தீவுகள் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியில் ஹிந்தி வர்ணனையாளராக செயல்பட உள்ளார். 

மேற்கிந்த தீவுகள் அணிக்கு எதிராக 10 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளதை பற்றியும் டெஸ்ட் கிரிக்கெட் குறித்தும் பேசுவார் என ஜியோ சினிமாஸ் தெரிவித்துள்ளது. 

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஜூலை 12ஆம் தேதி தொடங்குகிறது. 

ஓய்விற்குப் பிறகு வர்ணனையாளராக செயல்படுவதே வழக்கமாக இருந்தாலும் சில வீரர்கள் ஓய்வுக்கு முன்னமே கமெண்டரி செய்துள்ளனர்.   ஏற்கனவே, தினேஷ் கார்த்திக் இதுபோல வர்ணனையாளராக செயல்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.