இது மும்பையா அல்லது டிரினிடாட்டா?: வைரலாகும் ரோஹித்தின் ட்வீட்டும் ரியாக்‌ஷன் விடியோவும்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக டிராவில் முடிவடைந்தது. 
படம்: ட்விட்டர் | ரோஹித் சர்மா
படம்: ட்விட்டர் | ரோஹித் சர்மா

இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் விளையாட மே.இந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளது. இதில் முதல் டெஸ்டில் இந்திய வெற்றி பெற்ற நிலையில் 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா.அடுத்து ஆடிய மே.இ.தீ. 255க்கு ஆல் அவுட்டானது. இரண்டாட்வது இன்னிங்ஸில் இந்திய அணி அதிரடியாக விளையாடி 181/2 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய மே.இ.தீ. அணி 76/2 ரன்கள் எடுத்திருந்த வேளையில் மழை குறுக்கிட்டது. 5ஆம் நாள் முழுவதும் மழையால் ஆட்டம் நடைபெறவே இல்லை. 

இதனால் இந்திய அணி தொடரினை வென்றது. போட்டி முடிந்தப் பிறகு ரோஹித் சர்மா, “இது மும்பையா அல்லது டிரினிடாட்டா?” என்ற சந்தேக கேள்வியை எழுப்பியுள்ளார். எனெனில் தற்போது வட இந்தியாவில் ஹிமாச்சல், தில்லி, மும்பை ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

ரோஹித்தின் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது. மேலும் ரோஹித்தின் முகபாவனைகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com