பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 114 ரன்களுக்கு சுருண்டது மே.இ.தீவுகள்!

இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் 114 ரன்களுக்கு சுருண்டது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 2:43 am

DIN

இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் 114 ரன்களுக்கு சுருண்டது.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 27) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்  114 ரன்களுக்கே சுருண்டது. அந்த அணியில் கேப்டன் ஷாய் ஹோப் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா, முகேஷ் குமார் மற்றும் ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.