ஸ்டீவ் ஸ்மித் ரன் அவுட் சர்ச்சை: நடுவர் தீர்ப்புக்கு அஸ்வின் ஆதரவு! 

5வது ஆஷஸ் போட்டியின் 2ஆம் நாள் விளையாட்டின்போது ஆஸி. வீரர் ஸ்மித் ரன் அவுட் குறித்து நடுவரின் தீர்ப்பு சர்ச்சையானது. 
ஸ்டீவ் ஸ்மித் ரன் அவுட் சர்ச்சை: நடுவர் தீர்ப்புக்கு அஸ்வின் ஆதரவு! 

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2-1 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 5வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய ஆஸி. அணி 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த் ஆஸி.அணியை ஸ்டீவ் ஸ்மித் தூக்கி நிறுத்தினார். தனது நிதானமான ஆட்டத்தினால் அரைசதம் (71) அடித்து அசத்தினார். போட்டியின்போது மார்க் வுட் வீசிய பந்தில் 2 ரன்கள் எடுக்கும்ப்போது கீப்பரால் ரன் அவுட் செய்யப்படுவார். மூன்றாம் நடுவர் இதற்கு ‘நாட் அவுட்’ என தீர்ப்பு வழங்குவார். ஏனெனில் பந்தினை பிடிக்கும் முன்பே ஸ்டம்பினை அடித்துவிடுவார் பெயர்ஸ்டோ. இரண்டாவது பெயில்ஸை பெயர்ஸ்டோ அடிப்பதற்குள் ஸ்மித் எல்லைக் கோட்டினுள் நுழைந்து விடுவார். 

ஏற்கனவே பெயர்ஸ்டோ ரன் அவுட் சர்ச்சையான நிலையில் இந்த விடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த நடுவரின் தீர்ப்புக்கு இங்கிலாந்து அணி ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். ஆனால் கிரிக்கெட் விமர்சகர்கள் நடுவர் தீர்ப்புக்கு ஆதரவளிகின்றனர். இந்திய வீரர் அஸ்வினும் நடுவரின் தீர்ப்புக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com