
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்று, உலக டெஸ்ட் சாம்பியன் ஆனது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணியில் நெம்.1 பௌலர் அஸ்வினை எடுக்காதது மிகப் பெரிய தவறென பலரும் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதையும் படிக்க: பிரபல வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 1,100 விக்கெட்டுகள்!
தோல்விக்கு பொறுப்பேற்று ரோஹித் சர்மா பதவி விலக வேண்டுமென ரசிகர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கெல் கிளார்க் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கிளார்க் கூறியதாவது:
எனக்கு ரோஹித் மிது நம்பிக்கையுள்ளது. அவர் நல்ல கேப்டன். அவரது ஆக்ரோஷமான பாணி எனக்கு பிடிக்கும். அவர் எப்போதும் நம்பிக்கையுடன் உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி பல வெற்றிகளை குவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ப்பை இந்திய அணி வெல்லாத்தால் ரோஹித் இந்தியாவை வழிநடத்த சரியான நபராக இல்லையென கருத முடியாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.