உலகக் கோப்பை தகுதிச் சுற்று: பூரன் சதம்; மே.இ.தீவுகள் 374 ரன்கள் குவிப்பு! 

ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்றின் லீக் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் மே.இ.தீவுகள் அணி 374 ரன்கள் எடுத்துள்ளது. 
உலகக் கோப்பை தகுதிச் சுற்று: பூரன் சதம்; மே.இ.தீவுகள் 374 ரன்கள் குவிப்பு! 
Updated on
1 min read

8 அணிகள் பங்கேற்கும் குவாலிஃபையா் போட்டிகள் ஜிம்பாப்வேயில் ஜூன் 18இல் இருந்து நடைபெற்று வருகின்றன. இதில் நெதர்லாந்திற்கு எதிரான போட்டியில் 50 ஓவர் முடிவில் மே.இ.தீவுகள் அணி 374/6 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ஆரம்பமே அதிரடியாக தொடங்கிய பிராண்டன் கிங் 76 ரன்கள் எடுத்து அசத்தினார். சார்லஸ் அரைசதமடித்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்து ஆடிய கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் நிகோலஸ் பூரன் அற்புதமாக விளையாடினார்கள். இதில் நிகோலஸ் பூரன் 65 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து அசத்தினார். இது இவரது 3வது ஒருநாள் சதமாகும். 6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் இதிலடங்கும். 

இறுதியில் அதிரடியாக் ஆடிய கீமோபால் 25 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். 50 ஓவரில் 374/6 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து அணி சார்பில்  வான் பீக் 3 விக்கெட்டுகள், பாஸ் டீ லீடே, ஷகிப் ஜீல்பிகுர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

ஏற்கனவே இந்த இரண்டு அணிகளும் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com