பகல், இரவு ஆட்டங்களாக உலகக் கோப்பை: எத்தனை மணிக்கு?

இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை போட்டி நடைபெறும் நேரத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது.
பகல், இரவு ஆட்டங்களாக உலகக் கோப்பை: எத்தனை மணிக்கு?
Updated on
1 min read


இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை போட்டி நடைபெறும் நேரத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் வரும் அக்டோபா் 5 முதல் நவம்பா் 19-ஆம் தேதி வரை ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதில் சென்னையில் 5 போட்டிகள் நடைபெற உள்ளன. மொத்தம் 10 மைதானங்களில் இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன.

முதல் போட்டி நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் அக்.5-இல் அகமதாபாத்தில் நடக்கவிருக்கிறது.

முதல் அரையிறுதிப் போட்டி நவம்பர் 15-இல் மும்பையிலும் 2-வது அரையிறுதிப் போட்டி நவம்பர் 16-இல் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளன. நவ.19-இல் அகமதாபாத்தில் உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் தலா ஒரு போட்டி விளையாடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.  ஏற்கெனவே 8 அணிகள் தேர்வான நிலையில் தகுதிச் சுற்று தேர்வின் மூலம் மற்ற 2 அணிகளும் தேர்வாகும்.

மேலும், பகல் நேர ஆட்டங்கள் காலை 10.30 மணிக்கும் பகலிரவு ஆட்டங்கள் பகல் 2 மணிக்கும் நடைபெறவுள்ளன. இந்தியா பங்கேற்கும் அனைத்து போட்டிகளும் பகலிரவு ஆட்டங்களாக அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவுக்கான போட்டி அட்டவணை:

அக்.8:ஆஸ்திரேலியா, இடம்: சென்னை
அக்.11: ஆப்கானிஸ்தான், இடம்: தில்லி
அக்.15: பாகிஸ்தான், இடம்:ஆமதாபாத்  
அக்.19: வங்கதேசம், இடம்: புணே
அக்.22: நியூசிலாந்து, இடம்: தர்மசாலா
அக்.29: இங்கிலாந்து, இடம்: லக்னௌ
நவ.2: குவாலிஃபையர் 1. இடம்: மும்பை
நவ.5: தென்னாப்பிரிக்கா, இடம்: கொல்கத்தா
நவ.11: குவாலிஃபையர் 2. இடம்: பெங்களூரு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com