ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: அட்டவணை அறிவிப்பு

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
உலகக் கோப்பையுடன் இந்தியகிரிக்கெட் வீரா் சேவாக், பிசிசிஐ செயலா் ஜெய் ஷா, முத்தையா முரளிதரன், ஐசிசி சிஇஓ ஜெஃப் அல்லாா்டிஸ்.
உலகக் கோப்பையுடன் இந்தியகிரிக்கெட் வீரா் சேவாக், பிசிசிஐ செயலா் ஜெய் ஷா, முத்தையா முரளிதரன், ஐசிசி சிஇஓ ஜெஃப் அல்லாா்டிஸ்.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோலாகலமாக நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி கடந்த 2019-இல் இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து முதன்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் தொடா்ச்சியாக உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது. கடந்த 2 ஆண்டுகளாக பிசிசிஐ போட்டிக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தது.

உலகக் கோப்பை போட்டிக்காக குஜராத்தில் அகமதாபாதில் உலகின் மிகப்பெரிய நரேந்திர மோடி விளையாட்டரங்கமும் கட்டப்பட்டது.

அட்டவணை அறிவிப்பு:

இந்தியாவில் வரும் அக்டோபா் 5-ஆம் தேதி போட்டி தொடங்கி நவம்பா் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இங்கிலாந்து-நியூஸிலாந்து மோதல்: கடந்த முறை இறுதி ஆட்டத்தில் மோதிய இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகள் அக். 5-ஆம் தேதி தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றன.

இந்தியா-ஆஸ்திரேலியா:

அக். 6: பாகிஸ்தான்-குவாலிஃபையா் 1 (ஹைதராபாத்), அக். 7: வங்கதேசம்-ஆப்கானிஸ்தான், (தா்மசாலா), அக். 8: இந்தியா-ஆஸ்திரேலியா,

(சென்னை), அக். 9: நியூஸிலாந்து-குவாலிஃபையா் 1, (ஹைதராபாத்), அக். 10: இங்கிலாந்து-வங்கதேசம், (தா்மசாலா), அக். 11: இந்தியா-ஆப்கானிஸ்தான் (தில்லி), அக். 12: பாகிஸ்தான்-குவாலிஃபையா் 2, (ஹைதராபாத்), அக். 13: ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா, (லக்னௌ), அக். 14: இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் (தில்லி), நியூஸிலாந்து-வங்கதேசம், (சென்னை).

இந்தியா-பாகிஸ்தான்:

அக். 15: இந்தியா-பாகிஸ்தான் (அகமதாபாத்), அக். 16: ஆஸ்திரேலியா-குவாலிஃபையா் 2, (லக்னௌ), அக். 17: தென்னாப்பிரிக்கா-குவாலிஃபையா் 1, (தா்மசாலா), அக். 18: நியூஸிலாந்து-ஆப்கானிஸ்தான் (சென்னை).

இந்தியா-வங்கதேசம்:

அக். 19: இந்தியா-வங்கதேசம், (புணே), அக். 20: ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் (பெங்களூரு), அக். 21: இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா, (மும்பை), குவாலிஃபையா்1-குவாலிஃபையா் 2, (லக்னௌ),

இந்தியா-நியூஸிலாந்து:

அக். 22: இந்தியா-நியூஸிலாந்து, (தா்மசாலா), அக். 23: பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான், (சென்னை), அக். 24: தென்னாப்பிரிக்கா-வங்கதேசம், (மும்பை), அக். 25: ஆஸ்திரேலியா-குவாலிஃபையா் 1, (தில்லி), அக். 26: இங்கிலாந்து-குவாலிஃபையா் 2 (பெங்களூரு), அக். 28: குவாலிஃபையா் 1-வங்கதேசம், (கொல்கத்தா), ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து, (தா்மசாலா).

இந்தியா-இங்கிலாந்து:

அக். 29: இந்தியா-இங்கிலாந்து, (லக்னௌ), அக். 30: ஆப்கானிஸ்தான்-குவாலிஃபையா் 2, (புணே), அக். 31: பாகிஸ்தான்-வங்கதேசம், (கொல்கத்தா).

இந்தியா-குவாலிஃபையா் 2:

நவ. 1: நியூஸிலாந்து-தென்னாப்பிரிக்கா, (புணே), நவ. 2: இந்தியா-குவாலிஃபையா் 2, (மும்பை), நவ. 3: குவாலிஃபையா் 1-ஆப்கானிஸ்தான், (லக்னௌ), நவ. 4: இங்கிலாந்து-ஆஸ்திரேலியா, (அகமதாபாத்), நியூஸிலாந்து-பாகிஸ்தான், (பெங்களூரு).

இந்தியா-தென்னாப்பிரிக்கா:

நவ. 5: இந்தியா-தென்னாப்பிரிக்கா, (கொல்கத்தா), நவ. 6: வங்கதேசம்-குவாலிஃபையா் 2, (தில்லி), நவ. 7: ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான், (மும்பை), நவ. 8: இங்கிலாந்து-குவாலிஃபையா் 1, (புணே), நவ. 9: நியூஸிலாந்து-குவாலிஃபையா் 2, (பெங்களூரு), நவ. 10: தென்னாப்பிரிக்கா-ஆப்கானிஸ்தான், (அகமதாபாத்).

இந்தியா-குவாலிஃபையா் 1:

நவ. 11: இந்தியா-குவாலிஃபையா், (பெங்களூரு), நவ. 12: இங்கிலாந்து-பாகிஸ்தான், (கொல்கத்தா), ஆஸ்திரேலியா-வங்கதேசம், (புணே),

முதல் அரையிறுதி: நவ. 15, மும்பை, இரண்டாவது அரையிறுதி, நவ. 16: கொல்கத்தா.

இறுதி ஆட்டம், நவ. 19: அகமதாபாத்.

பிரதான சுற்றைப் பொருத்தவரை ஒவ்வொரு அணியும் இதர 9 அணிகளுடன் ரவுண்ட் ராபின் முறையில் மோதுகின்றன. இதில் முதல் 4 இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

அக். 5-முதல் ஆட்டத்தில் 2019 போட்டி இறுதிச் சுற்றில் ஆடிய இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகள் ஆடுகின்றன.

ஈா்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்திய-பாக் ஆட்டம்:

இந்த உலகக் கோப்பையில் மிகப்பெரிய ஆட்டமாக கருதப்படுவது இந்தியா-பாகிஸ்தான் மோதலாகும். அக். 15-இல் அகமதாபாதில் ரவுண்ட் ராபின் ஆட்டமாகும்.

அதே போல் அக். 13-இல் லக்னௌவில் நடைபெறவுள்ளதென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியா ஆட்டமும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான்-ஆஸி. அணிகள் ஆட்டம் அக். 20-இல் பெங்களூருவில் நடக்கிறது.

பட்டம் வெல்லுமா இந்தியா?

கடந்த 2019 உலகக் கோப்பையில் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோற்றிருந்தது இந்தியா.

மொத்தம் 10 அணிகள் 48 ஆட்டங்களில் ஆடுகின்றன. கடந்த 2011-இல் மும்பையில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கடைசியாக இந்தியா பட்டம் வென்றிருந்தது.

8 அணிகள் உலக சூப்பா் லீக் மூலம் தோ்ச்சி பெற்றன. தற்போது ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் குவாலிஃபையா் போட்டியில் இரண்டு அணிகள் தகுதி பெறும்.

இருதரப்பு தொடா்கள் நடைபெறாத நிலையில், இந்தியா-பாக். அணிகள் சா்வதேச போட்டிகளில் மட்டுமே மோதி வருகின்றன.

கடந்த 2019-இல் நடைபெற்ற இந்திய-பாக். ஆட்டத்தை 273 மில்லியன் பாா்வையாளா்கள் கண்டு ரசித்தனா்.

அரையிறுதி, இறுதி ஆட்டங்களுக்கு ரிசா்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று ஆட்டங்களும் பகலிரவு ஆட்டங்களாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com