உலகக் கோப்பை தோல்வியிலிருந்து வெளிவர டபிள்யூபிஎல் உதவும்: ஜெமிமா ரோட்ரிக்ஸ்

மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்த அதிர்ச்சியில் இருந்து வெளியில் வரமுடியவில்லை என இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்
உலகக் கோப்பை தோல்வியிலிருந்து வெளிவர  டபிள்யூபிஎல் உதவும்: ஜெமிமா ரோட்ரிக்ஸ்

மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்த அதிர்ச்சியில் இருந்து வெளியில் வரமுடியவில்லை என இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த டபிள்யூபிஎல் தொடர் மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு மருந்தாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார். 

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து உலகக் கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் சார்பில் ஜெமிமா மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் சிறப்பாக விளையாடினர் . இந்த இணை 4-வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தது. இருப்பினும், இறுதியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

இந்த நிலையில், மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்த அதிர்ச்சியில் இருந்து வெளியில் வரமுடியவில்லை என இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது குறித்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் பேசியதாவது: உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் ஏற்பட்ட தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கு சில நாட்கள் ஆனது. உண்மையில், அரையிறுதியில் தோல்வியடைந்த 2 நாட்களுக்குப் பின்னரும் நாங்கள் தென்னாப்பிரிக்காவில் இருந்தோம். அணி வீரர்கள் தங்களது குடும்பத்துடன் இரண்டு நாட்கள் இருந்தது மனதுக்கு ஆறுதலாக இருந்தது. தற்போது, டபிள்யூபிஎல் போட்டிகளுக்காக வந்துள்ளோம். உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது எங்களை வருத்தினாலும், உடனடியாக டபிள்யூபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ளது மனதுக்கு ஆறுதலாக உள்ளது. இந்த டபிள்யூபிஎல் தொடர் எங்களது எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிவர உதவும் என்றார்.

தில்லி கேப்பிட்டல்ஸ் தொடர்பாக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com