டபிள்யுபிஎல்: புதிய வீராங்கனையைத் தேர்வு செய்த குஜராத் அணி
டாட்டினுக்குப் பதிலாக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிம்பர்லி கார்த் தேர்வாகியுள்ளார்.


டபிள்யுபிஎல் போட்டியிலிருந்து மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டர் டாட்டின் விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ சாா்பில் 5 மகளிா் அணிகள் பங்கேற்கும் டபிள்யுபிஎல் (உமன்ஸ் ப்ரீமியா் லீக்) டி20 லீக் போட்டி மும்பையில் இன்று தொடங்குகிறது. உலகின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுவதால் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது டபிள்யுபிஎல்.
டபிள்யுபிஎல் போட்டி மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 5 அணிகளும் இதர 4 அணிகளுடன் தலா 2 ஆட்டங்களில் விளையாடும். டபிள்யுபிஎல் போட்டியின் விளம்பரதாரராக டாடா நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. டபிள்யுபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் குஜராத் - மும்பை அணிகள் மோதவுள்ளன. மும்பையில் உள்ள டிஒய் படேல் விளையாட்டுத் திடலில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் டபிள்யுபிஎல் போட்டியிலிருந்து மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டர் டாட்டின் விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டாட்டினை குஜராத் அணி ரூ. 60 லட்சத்துக்கு ஏலத்தில் தேர்வு செய்திருந்தது. இதையடுத்து டாட்டினுக்குப் பதிலாக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிம்பர்லி கார்த் தேர்வாகியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...