5-வது நாள்: சவாலை நன்கு எதிர்கொள்ளும் ஆஸி. பேட்டர்கள்!

ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 18 ரன்கள் பின்தங்கியுள்ளது.
5-வது நாள்: சவாலை நன்கு எதிர்கொள்ளும் ஆஸி. பேட்டர்கள்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. 4-வது டெஸ்ட் ஆமதாபாத்தில் வியாழன் அன்று தொடங்கியது. 

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 167.2 ஓவர்களில் 480 ரன்கள் எடுத்தது. கவாஜா 180, கிரீன் 114 ரன்கள் எடுத்தார்கள். அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 571 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 186, ஷுப்மன் கில் 128 அக்‌ஷர் படேல் 79 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸை இன்றும் தொடர்கிறது.

5-வது நாள் உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி, 36 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்தது. குனேமன் 6 ரன்களில் அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். எனினும் டிஆர்எஸ் வழியாக முறையீடு செய்யாமல் கிளம்பினார். ஆனால் ரீப்ளேவில் அது அவுட் இல்லை எனத் தெரிந்தது. ஹெட் 45, லபுஷேன் 22 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 18 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com