பும்ரா, அஸ்வினைப் பின்னுக்குத் தள்ளி அக்‌ஷர் படேல் நிகழ்த்திய சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 50 விக்கெட்டுகளை எடுத்த இந்தியப் பந்துவீச்சாளர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல்.
பும்ரா, அஸ்வினைப் பின்னுக்குத் தள்ளி அக்‌ஷர் படேல் நிகழ்த்திய சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 50 விக்கெட்டுகளை எடுத்த இந்தியப் பந்துவீச்சாளர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் ஆல்ரவுண்டர் அக்‌ஷர் படேல்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. 4-வது டெஸ்ட் ஆமதாபாத்தில் வியாழன் அன்று தொடங்கியது. 

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 167.2 ஓவர்களில் 480 ரன்கள் எடுத்தது. கவாஜா 180, கிரீன் 114 ரன்கள் எடுத்தார்கள். அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 571 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 186, ஷுப்மன் கில் 128 அக்‌ஷர் படேல் 79 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸை இன்றும் தொடர்கிறது.

இன்று சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட், 90 ரன்கள் எடுத்த நிலையில் அக்‌ஷர் படேல் பந்தில் போல்ட் ஆனார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அக்‌ஷர் படேலின் 50-வது விக்கெட் இது. 12-வது டெஸ்டில் இது சாத்தியமாகியுள்ளது. அஸ்வின் 9 டெஸ்டுகளில் 50 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 

எனினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 50 விக்கெட்டுகள் எடுத்த இந்தியப் பந்துவீச்சாளர் என்கிற பெருமையை அக்‌ஷர் படேல் அடைந்துள்ளார். 2205 பந்துகளில் இந்த இலக்கை அவர் எட்டியுள்ளார். மேலும் மோடி மைதானத்தில் 3 டெஸ்டுகளில் இதுவரை 22 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

குறைந்த பந்துகளில் 50 டெஸ்ட் விக்கெட்டுகள்: இந்தியப் பந்துவீச்சாளர்கள்

அக்‌ஷர் படேல் - 2205 பந்துகள் 
பும்ரா - 2465 பந்துகள்
கர்சன் காவ்ரி - 2534 பந்துகள் 
அஸ்வின் - 2597 பந்துகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com