பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தொடர் நாயகன் விருது: அஸ்வின் புதிய சாதனை!

இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின், 10 முறை தொடர் நாயகன் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.

News image
Updated On :14 மார்ச் 2023, 10:32 am

DIN

இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின், 10 முறை தொடர் நாயகன் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என வென்றுள்ளது. ஆமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ் டிரா ஆனது. ஆமதாபாத் டெஸ்டில் சதமடித்த விராட் கோலி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார். அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவருக்கும் தொடர் நாயகன் விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர் நாயகன் விருதை 10 முறை வென்ற முதல் இந்திய வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகளவில் அதிகமுறை தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்களில் அஸ்வின் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

தொடர் நாயகன் விருதை அதிகமுறை வென்ற இந்திய வீரர்கள்

10 - அஸ்வின்
5 - சச்சின்
5 - சேவாக்
4 - கபில் தேவ்
4 - ஹர்பஜன் சிங்
4 - அனில் கும்ப்ளே
4 - ராகுல் டிராவிட்

தொடர் நாயகன் விருதை அதிகமுறை வென்ற வீரர்கள்

1. முரளிதரன் - 11
2. அஸ்வின் - 10
3. காலிஸ் - 9
4. இம்ரான் கான்/ஹேட்லி/வார்னே - 8
5. வாசிம் அக்ரம்/சந்தர்பால் - 7

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.