தரவரிசையில் நெ.1 பந்துவீச்சாளர் அஸ்வின்
டெஸ்ட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஜடேஜா, அஸ்வின் முதல் இரு இடங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்கள்.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என வென்றுள்ளது. ஆமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ் டிரா ஆனது. ஆமதாபாத் டெஸ்டில் சதமடித்த விராட் கோலி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார். அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவருக்கும் தொடர் நாயகன் விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் தொடரில் 25 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின், ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். அதேபோல கடைசி டெஸ்டில் சதமடித்த விராட் கோலி, டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் ஏழு இடங்கள் முன்னேறி 13-வது இடத்தைப் பிடித்துள்ளார். ரிஷப் பந்த் 9-வது இடத்திலும் ரோஹித் சர்மா 10-வது இடத்திலும் உள்ளார்கள்.
டெஸ்ட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஜடேஜா, அஸ்வின் முதல் இரு இடங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...